மரக்கன்று நடும் விழா

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில்  அகத்தியா பள்ளி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ளஅகத்தியா மெட்ரிக் மேல்நிலை  பள்ளியில், தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு, அப்பள்ளியின் சுற்றுச்சுழல் கிளப் மாணவ-மாணவியர் சார்பில் நேற்று முன்தினம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டனர். இதில், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை பெருந்தலைவர் சேகர், வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்….

The post மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: