மயிலாடுதுறை நகராட்சி அதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி(64). இவர் நகர்மன்ற பதவிக்காக மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று காலை அதிமுக தொண்டர்களுடன் வாக்கு சேகரித்துள்ளார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று விரதம் இருந்துள்ளார்.பின்னர் மதியம் உணவு அருந்திய அவர் சின்னமாரியம்மன் கோயில் குத்துவிளக்கு பூஜையில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அன்னதாட்சிக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். …

The post மயிலாடுதுறை நகராட்சி அதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: