புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம்: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதைதொடர்ந்து, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்த, தனியார் தொழிற்சாலையின் சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ₹33 லட்சம் செலவில் நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் புதியதாக ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.புதிய ஆக்சிஜன்  உற்பத்தி கூடத்தின் துவக்க விழா நேற்று  நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, க.சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை திறந்து வைத்தனர். இதில்,  மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஜீவா, குடும்ப நலம் துணை இயக்குனர் விஜயகுமார், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஓன்றிய குழு துணைத் தலைவர் சேகர், தனியார் நிறுவன மேலாளர்கள் சேகர், சுரேஷ்குமார், கார்த்திக், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம்: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: