பாஜ.வுக்கு எதிராக புதிய அணி தாக்கரேவுடன் 20ம் தேதி சந்திரசேகர் ராவ் சந்திப்பு

ஐதராபாத்: ஆளும் பாஜ.வுக்கு எதிராக மூன்றாவது அணியை அமைப்பதில் எதிர்கட்சிகள் மும்முரமாக உள்ளன.  மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா தீவிரமாக உள்ளார். இதேபோல், பாஜ.வுக்கு எதிராக தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகர் ராவும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், புதிய அணி அமைப்பது தொடர்பாக வரும் 20ம் தேதி சந்திரசேகர் ராவ் மும்பை சென்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுகிறார். இது தொடர்பாக, தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே முதல்வர் சந்திரசேகர் ராவுடன் தொலைபேசியில் உரையாடினார். முதல்வரை மும்பை வரும்படி அழைப்பு விடுத்தார்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது….

The post பாஜ.வுக்கு எதிராக புதிய அணி தாக்கரேவுடன் 20ம் தேதி சந்திரசேகர் ராவ் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: