பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான நூல்கள் தனிப்பிரிவு தொடக்கம் துணைவேந்தர் தொடங்கி வைத்தார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்தில்

திருவலம், ஜூன் 19: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 120க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக நூலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் த.ஆறுமுகம் தலைமை வகித்தார். பதிவாளர் செந்தில் வேல்முருகன், பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை புத்தகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு மத்திய, மாநில அரசு பல்வேறு போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற பயன்படும் என்பதால் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.

The post பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான நூல்கள் தனிப்பிரிவு தொடக்கம் துணைவேந்தர் தொடங்கி வைத்தார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: