பல்வேறு நோயினால் சிகிச்சை பெற்றவர்கள் தடுப்பூசியை 8 வாரம் கழித்து தான் போட வேண்டும்

* குணமடைந்தவர்கள் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது* அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, இதயநோய் சிகிச்சை பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் மூர்த்தி தகவல்சென்னை: கர்ப்பிணி பெண்கள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தவர்கள், கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு  நோயினால் சிகிச்சை பெற்றவர்கள் 8 வாரத்துக்கு பிறகு தான் தடுப்பூசி போட வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இதயநோய் சிகிச்சை பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் மூர்த்தி கூறினார். மேலும் இது குறித்து சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் மூர்த்தி கூறியதாவது: கொரோனா 2வது அலையில் அறிகுறிகள் கொஞ்சம் மாறி இருக்கிறது. ஐசியூவில் சிகிச்சை எடுக்கும் சதவீதம் தற்போது 2-3% தான் குறைந்துள்ளது. மேலும் ஐசியூவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 2வது அலையில் குறைந்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆனால் 2வது அலையில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம், இறப்பு விகிதமும் குறைவாக தான் இருக்கிறது. தடுப்பூசி போடுபவருக்கு கொரோனா தொற்று வந்தாலும் 90 சதவீதம் சரியாகிவிடும். மேலும் பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் தடுப்பூசி போடலாம். ஆனால் வால்வு அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆன்டிபயோகிராப்ட் வால்வு ஓடுவதற்கு பிளட்தின்னஸ் போடுவார்கள் அவர்கள் எந்த வியாதி இருந்தாலும் நார்மல் ஆனபிறகு தான் வேக்சின் போட வேண்டும். அதிகமாக இருக்கும் போது, பிரச்சனைகள் இருக்கும் போது போடக்கூடாது. அதைப்போன்று 80 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள், 15-18 வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமானவர்கள், கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டு சரியானவர்கள், வேறு எந்த நோய்க்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 8 வாரத்திற்கு பிறகு தான் தடுப்பூசி போட வேண்டும். கொரோனாவில் இருந்து குணமானவர்கள் இரண்டு மாதம் கழித்து தான் போட வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு ஆன்டிபாடிஸ் ஏற்கனவே இருக்கும். மற்றபடி இதயநோய், ஆஸ்துமா நோய், சர்க்கரை நோயாளிகள், ரத்த அதிகரிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே வேக்சின் போட்டவர்களுக்கு அலர்ஜி இருந்தால், பாதிப்பு அதிகமாக இருந்தால் 2வது டோஸ் போடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை உள்பட பல்வேறு இணைநோய்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் செயற்கை வால்வு மாற்றியவர்கள் வால்வு உரையாமல் இருப்பதற்கு மாத்திரை போடுவார்கள். இவர்கள், ஐஎன்ஆர் சோதனை செய்து தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் கோவிஷீல்டில் ரத்த உரையும் தன்மை அதிகமாக இருக்கும். அதனால் பக்கவாதம், இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. டெங்கு பாதிப்பு இருந்தால் தடுப்பூசி போடக் கூடாது. கொரோனா வந்தவர்கள் ஆஸ்துமா நோயாளிகள், உடல் பருமன் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், கிட்னி நோயாளிகள், பக்கவாதம் உள்ள நோயாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, இதய பாதிப்பு வந்தவர்களுக்கு கொரோனா வந்தால் குணமாவதற்கு நாட்கள் ஆகும். அதனால் அவர்கள் வியாதிகளை கட்டுக்குள் வைத்து கொண்டு முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் வராமல் தடுக்க முடியும். கொரோனா அறிகுறிகள் முதல் 3 நாட்களில் எதுவும் தெரிவதில்லை 5-8 நாட்களில் தான் பாசிட்டிவ் என்று வருகிறது. எனவே காய்ச்சல், உடல்வலி போன்று அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக சிடிஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், ‘சிடிஸ்கேன், இசிஜி, அல்டரா சவுண்ட்,  ரத்த பரிசோதனை’ என முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் உயிரிழப்பை தடுக்க முடியும்.உணவுக்கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். …

The post பல்வேறு நோயினால் சிகிச்சை பெற்றவர்கள் தடுப்பூசியை 8 வாரம் கழித்து தான் போட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: