படம் எடுக்க பணம் இல்லை: பார்த்திபன்

சென்னை: தான் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், சரத்குமார், ராதிகா, ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பார்த்திபன் பேசியதாவது:சினிமா எடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. பெரிய ஆர்வம் இருக்கு என்றார்.’இரவின் நிழல்’ ஒரு, நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். இந்த படம் பற்றி கர்வத்தோடு சொல்றதுக்குப் பின்னால் பெரிய உழைப்பு இருக்கு. அதுக்கு எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவு ஏ.ஆர்.ரஹ்மான் என்றார்….

The post படம் எடுக்க பணம் இல்லை: பார்த்திபன் appeared first on Dinakaran.

Related Stories: