நாலாயிரப் பிரபந்தம் கற்றறியும் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3000 வழங்கப்படும். வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 14 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி காலம் 2 ஆண்டுகள். சேர்க்கை படிவங்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25ம் தேதி. ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்….

The post நாலாயிரப் பிரபந்தம் கற்றறியும் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: