நாமக்கல் கிரின்பார்க் கோச்சிங் சென்டரில் படித்த மாணவ, மாணவிகள் சாதனை

நாமக்கல்: நாமக்கல் அடுத்த போதுப்பட்டியில் கிரின்பார்க் நீட் கோச்சிங் மையம் அமைந்துள்ளது. கடந்த வாரம் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிரின்பார்க் கோச்சிங் சென்டரில் படித்த மாணவர் ஹனுஷ்கண்ணா 720க்கு 705 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நாமக்கல் கிரின்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்தவுடன், நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.மாணவர்கள் ஜனந்த்ராம், ஸ்ரீரிஷி, நவீன்குமார் மாணவிகள் தனுஸ்ரீ, சுதர்சுந்தனா ஆகியோர் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். நீட்தேர்வில் 675 மதிப்பெண்களுக்கு மேல் 39 பேரும், 650க்கும் மேல் 111 பேரும், 625க்கும் மேல் 221 பேரும், 600க்கும் மேல் 391 பேரும், 550க்கும் மேல் 889 பேரும், 500க்கும் மேல் 1521 பேரும் மற்றும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 2246 பேரும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கிரின் பார்க் கோச்சிங் சென்டரின் சேர்மன் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

The post நாமக்கல் கிரின்பார்க் கோச்சிங் சென்டரில் படித்த மாணவ, மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: