₹4.72 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, ஜூலை 31: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் 214 மூட்டை பருத்தி ₹4.72 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டுவந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ₹5,399 முதல் ₹7,409 வரை விற்பனையானது. சுரபி காட்டன் குவிண்டால் ₹7,300 முதல் ₹8,100 வரை விற்பனையானது.

The post ₹4.72 லட்சத்திற்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: