மல்லசமுத்திரம், ஜூலை 30: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டியில் சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில், நேற்று ஆடிமாத தேய்பிறை கிருத்திகை தினத்தை முன்னிட்டு, காலை 6மணி முதல் மாலை வரை, மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. மூலவர் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ெதாடர்ந்து சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளித்தார். கோயில் முழுவதும் வண்ணமலர்கள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், உப்பு, மிளகு வீசியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post கந்தசாமி கோயிலில் கிருத்திகை வழிபாடு appeared first on Dinakaran.