தோப்புத்துறை அரசுப் பள்ளிக்கு இடம் வாங்க துபாய் சங்கம் ரூ.50,000 நிதியுதவி

 

வேதாரண்யம், ஜூலை 14: வேதாரண்யம் அடுத்ததோப்புத்துறை அரசு மாதிரி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இடவசதி இல்லாத காரணத்தால்தகரக் கொட்டையில் பள்ளி இயங்கி வருகிறது பள்ளிக்கு நிரந்தரகட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விரைவில் கட்டிடம் கட்டித் தருவதாக உறுதி அளித்து சென்றார்.
இந்த நிலையில் கூடுதலாக கட்டிடம் கட்ட பள்ளி அருகிலேயே இடம் வாங்குவது என தீர்மானிக்கபட்டது இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தோப்புத்துறை முஸ்லிம் துபாய் சங்கத்திடம் மனு அளித்திருந்தனர்.

சங்க நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று சங்கத் தலைவர் யூசுப்ஷா தலைமையில் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானுல் ஆரிஃபீன் ஜமாத் மன்ற துணை தலைவர் ஜனாப் ரபீக் ஜமாத் மன்ற பொருளாளர் நஜீப், டாக்டர்அக்பர் அலி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தோப்புத்துறை அரசுப் பள்ளிக்கு இடம் வாங்க துபாய் சங்கம் ரூ.50,000 நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: