பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து சமுதாய கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்

பெரம்பலூர், ஜூலை 2: எங்கள் கிராமத்திலுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடுசெய்து அதில் சமுதாயக்கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என பழைய அரசமங்கலம் கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட, பழைய அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்ப தாவது:
எங்கள் பழைய அரச மங்கலம் கிராமத்தில் அழகப்பன் மகன் மகாராஜன் என்பவர் வசித்து வரும் வீட்டிற்கு வடபுறம், நத்தம் புறம்போக்கு நிலமானது, வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எங்களது பழைய அரச மங்கலம் கிராம இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இதில் இந்தஇடம் முழுவதையும் எங்கள் கிராமத்தின் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்து, அங்கு விரைவில் பழைய அரசமங்கலம் கிராம பொதுமக்களின் வசதிக்காக சமுதாயக் கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை,மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் போன்றவற்றைக் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் சார்பாக அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து சமுதாய கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: