நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 381 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

நாகப்பட்டினம்,ஜூலை 2: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெகடர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 381 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், 1 மாற்றுத்திறனாளிக்கு கைபேசியினையும், 1 மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காளியினையும், 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டியினையும், நாகப்பட்டினம் வட்டம் பி.கொந்தகை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திரு.அப்துல் அஸீஸ் சவூதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக வரப்பெற்ற இழப்பீட்டுத்தொகை ₹9,83,212 அவரது மனைவி மதினா பேகம் காசோலையினையும், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தன்விருப்ப நிதியிலிருந்து வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த வனிதா என்பவருக்கு தையல் இயந்திரமும், வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு சேர்ந்த ராசப்பா என்பவருக்கு பெட்டிக்கடை வைத்திட ₹15,000க்கான காசோலையினையும், மாவட்ட சமூகநலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ₹87,155க்கான முதிர்வு தொகைக்கான காசோலையினையும், 2023-2024ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர்களுக்கான பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 381 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: