கோரிக்கை மனு இலவசமாக எழுதி தர ஏற்பாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 60 மாதம் வரையான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம், ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணி

பெரம்பலூர், ஜூலை 2: பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்ச்சி எளம்பலூர் ஊராட்சி, இந்திரா நகர் குழந்தைகள் மையத்தில் நேற்று திங்கட் கிழமை காலை நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை குழந்தைகளின் பெற்றோருக்கு மாவட்ட கலெக்டரும், பெரம்பலூர் எம்எம்ஏவும் வழங்கினர். பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை யின் சார்பில் வயிற்றுப் போக்குநோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகளின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக எளம்பலூர் ஊராட்சி இந்திரா நகர் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. வைட்டமின் ஏ திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது.கண் பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது.

ஜூலை 1ம்தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிவரை 2 மாதங்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் சிங்க் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. தேசிய வைட்டமின் ஏ திரவ திட்டத் தில் வருடத்தில் இரண்டு முறை ஆறு மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக் கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 43,619 குழந்தைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் மைய பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே, 6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் தவறாது கொடுத்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து குடி நீர் வசதி, கழிவுநீர் வசதி மேம்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து கலெக்டர் இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறை யாக பராமரிக்கப்படுகிறதா எனவும், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குடி நீரின் தரம் குறித்து குடித்து பார்த்தும் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

The post கோரிக்கை மனு இலவசமாக எழுதி தர ஏற்பாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 60 மாதம் வரையான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம், ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: