தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் குறுவை பயிர் நாசம்-விவசாயிகள் கவலை

நாகை : நாகை மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி செய்த பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. அவ்வப்பொழுது பெய்த கனமழையால் பயிர்கள் கருகாமல் தப்பியது. நாகை மாவட்டத்தில் தற்போது 65 சதவீதம் குறுவை அறுவடை முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, பெருங்கடம்பனூர், பாலையூர், தேவூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் வயல்களிலேயே சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் குறுவை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த கனமழை தொடர்ந்து நீடித்தால் குறுவை அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்படும். தொடர் மழையால் வயல்களில் நீர் தேங்கி நிற்கும். இதனால் அறுவடை இயந்திரம் வயல்களில் இறக்க முடியாது. ஈரப்பதம் நிறைந்த நெல்லை அறுக்கவும் முடியாது. கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் அறுவடை பணி பாதித்ததால் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அவலம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்….

The post தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் குறுவை பயிர் நாசம்-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: