தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 800 நகரங்களில் 475 பிரமாண்ட ஷோரூம், 1800க்கும் மேற்பட்ட மை ஜியோ ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு 5000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரிலையன்ஸ் டிஜிட்டல் இணைய பக்கத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிரடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, டி.வி, ஸ்மார்ட் போன், லேப்டாப், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்ளுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும். சில குறிப்பிட்ட மாடல் செல்போனான சாம்சங் எஸ்21 மாடல் ரூ.61,999க்கு கிடைக்கும். ஒன்பிளஸ் நோட் ஆரம்ப விலை ரூ.29,999 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அதேபோல, பிரேக்பாஸ்ட் காம்போவுக்கு பெரிய தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,299. மேலும் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் பொருட்களை வாங்க இஎம்ஐ வசதியும் உள்ளது. பெரிய அளவிலான பொருட்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 3 மணி நேரத்தில், பொருட்கள் வீட்டுக்கு வந்து வழங்கப்படும்….

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: