தனி சின்னத்தில் சமக போட்டியிடும்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, இளைஞரணி துணை செயலாளர் கிச்சா ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் புதிய கொடியை சரத்குமார் அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆலங்குளம், சங்ககிரி தொகுதிகளுக்கு நானும், வேளச்சேரி தொகுதிக்கு ராதிகாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம். இந்த முறை எந்த முடிவு கிடைத்தாலும் நாங்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த முறை போல ஓரிரு தொகுதிகள் கொடுத்தால் நாங்கள் உடன்பட மாட்டோம். எங்கள் தகுதிக்கேற்ப இடங்கள் தேைவ என்றார். …

The post தனி சின்னத்தில் சமக போட்டியிடும்: சரத்குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: