தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை : தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில் தஞ்சை, கரந்தை, பள்ளியக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் என்று காற்றுடன் கூடிய கோடை கனமழை பெய்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோடை பயிர்களான எள்ளு, உளுந்து, பயிறு காய்கறிகள் செய்திருந்தனர். இந்த மழையினால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். திருவையாறு, கண்டியூர், நடுக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் கோடை மழைபெய்தது.பட்டுக்கோட்டை: கடந்த சில மாதங்களாகவே  வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 9.20 மணிக்கு திடீரென மிதமான மழை பெய்தது. இந்த மழை 9.45 மணி வரை 25 நிமிடம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனை தொடர்ந்து மதியம் சுமார் 1 மணி முதல் 1.10 வரை லேசான சாரல் மழை பெய்தது.  தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகஇருந்து வந்த நிலையில் நேற்று பெய்த மிதமான மழையினால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: