டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு புதிய டீன் நியமனம்

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரிக்கிற்கு புதிய டீனாக டாக்டர் கற்பகம் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார். கண் சிகிச்சை துறையில் முதுநிலை மருத்துவராகவும், கண்புரை அறுவை சிகிச்சை நிபுணராகவும், கருவிழிப்படல அழற்சி துறை வல்லுனராகவும் இவர் செயலாற்றுகிறார். இகுறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் சுதா கூறுகையில், ‘டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 2015ம் ஆண்டிலிருந்து டாக்டர் கற்பகம் பணியாற்றுகிறார். இவர், இந்தியாவில் இன்னும் அதிக நகரங்களில் இந்த கல்வி வளாகங்களை உருவாக்குவார். வெளிநாடுகளிலும் எங்கள் கிளையை தொடங்குவதும் அவரது திட்டம்’ என்றார்.டாக்டர் கற்பகம் தாமோதரன் பேசுகையில், ‘நம் நாட்டில் குறைவான பார்வை அளவியல் நிபுணர்களே உள்ளனர். ஒவ்வொரு கண் மருத்துவ நிபுணருக்கும் 4 பார்வை அளவியல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது ஒவ்வொரு கண் மருத்துவருக்கும் ஒரே ஒரு பார்வை அளவியல் நிபுணரே உள்ளனர். பார்வை அளவியல் நிபுணர்களது பணி வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு உருவாக்குவது அவசியம்,’ என்றார்….

The post டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு புதிய டீன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: