ஜூனியர் வாலிபால் அணிக்கு வீரர்கள் தேர்வு 6ம் தேதி நடக்கிறது

 

ஊட்டி, ஜூலை 31: நீலகிரி மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் ஜெகநாதன் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கலந்து கொள்ளும் நீலகிரி மாவட்ட ஜூனியர் வாலிபால் அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இத்தேர்வு முகாம் ஆகஸ்ட் 6ம் தேதி காலை 11 மணி முதல் ஊட்டியில் உள்ள எச்ஏடிபி., மைதானத்தில் நடக்கிறது. தேர்விற்கு வரும் வீரர்கள் 1.1.2006க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் மாணவர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். தேர்வுக்கு வருவோர் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு செயலாளர் ஜெகநாதன் – 94430 52575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post ஜூனியர் வாலிபால் அணிக்கு வீரர்கள் தேர்வு 6ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: