சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்

 

ஊட்டி,ஜூன்29: நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி., சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

இதில் நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது,கட்ட பஞ்சாயத்து,கந்து வட்டி,தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனையை தடுப்பது,வெளி மாநில மதுபானங்களை கள்ளத்தனமாக கொண்டு விற்பனை செய்வதை தடுப்பது போன்றவைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் கட்டுபடுத்துவத குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விபத்துகளை குறைக்கும் வகையில் எடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பழங்குடியின கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கே சென்று பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மற்றும் கூடுதல் எஸ்பி., டிஎஸ்பி.,க்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

The post சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: