ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேசிய பசுமைப்படை ஆய்வு

 

ஊட்டி, ஜூலை2: ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை ஆய்வு மேற்கொண்டது.  நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை இயற்கையாடு இணைந்த பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா கூறியதாவது, கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நீலகிரிக்கு உரித்தான மரங்களை வளர்க்கப்பட்டுள்ளன. காய்கறிகள் காலை மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 50க்கும் மேற்பட்ட தாவரங்கள் மூலிகை தாவரங்கள் உள்ளன. பல வகையான பூச்செடிகள் இங்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த இயற்கை சூழலின் காரணமாக 20க்கும் மேற்பட்ட பறவையினங்கள்,பட்டம் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் ஆகியவை கூடு அமைத்து வாழ்ந்து வருகின்றன, என்றார். தொடர்ந்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் மூலிகைகளின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.இப்பள்ளியின் மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது என ஆசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

The post ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேசிய பசுமைப்படை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: