சேரங்கோடு, குந்தலாடி குடியிருப்பு பகுதியில் மண் சரிவு

 

பந்தலூர், ஜூலை 3: பந்தலூர் அருகே கொளப்பள்ளி மற்றும் குந்தலாடி பகுதியில் கன மழைக்கு குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி சிவன் காலனியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி வியரட்ணம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை நீடித்தால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பஜார் பகுதியில் உலக மாதா மளிகை கடைக்கு பின்புறம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  சேரங்கோடு பஜார் நெடுஞ்சாலை ஓரத்தில் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்பு மற்றும் நடைபாதை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் அப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர். சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post சேரங்கோடு, குந்தலாடி குடியிருப்பு பகுதியில் மண் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: