வெட்டுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்

ஊட்டி, ஜூன் 26: நீலகிரியில் சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கான நடைமுறையை அரசு எளிமையாக்க வேண்டும் என மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மலை மாவட்ட சிறு விவசாயிகள்‌ நல சங்கத்தின்‌ உயர்‌மட்ட குழு கூட்டம்‌ ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர்‌ தும்பூர்‌ போஜன்‌ தலைமை வகித்தார். துணை தலைவர்கள்‌ மணிகண்டன், சிவலிங்கம்‌, வக்கீல் சுப்ரமணியம், மணியன்‌, மணி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌.
மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ தங்களுடைய அத்தியாவசிய தேவைக்கு வளர்க்கப்படும்‌ சில்வர்‌ ஓக்‌ மரங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால், வனத்துறை, வருவாய்‌துறை, காவல்‌துறை ஆகிய துறையின்‌ மூலமாக கட்டிங்‌ பெர்மிட்‌, லாரியில்‌ எடுத்து செல்ல அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால், இதற்கு அனுமதி உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகம் மற்றும் கேரளம் மாநிலம்‌ இருப்பது போல பட்டா நிலத்தில்‌ உள்ள மரங்களை விவசாயிகள் அறுத்து விற்பனை செய்யும் நடைமுறையை அரசு எளிமையாக வேண்டும். தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் மண்ணின் தரம் குறித்து தெரிவதில்லை. இதனால், ஒரே மாதிரியான மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால், மகசூல் குறைகிறது. எனவே, அரசு முன்வந்து விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு மண்ணின் தரம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான சான்றுகளும் வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள ௯ட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்‌ இறந்து விட்டால்‌ இறப்பு நிதி, அவர்கள்‌ குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மறைந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இறப்பு நிதி உடனடியாக வழங்க வேண்டும்.

ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்ற அதனை‌ சுற்றியுள்ள பேரூராட்சி, ஊராட்சி ஆகியவைகளை சேர்ப்பதாக அரசு கூறியுள்ளது. எந்த ஒரு பேரூராட்சியையும், ஊராட்சியையும் மாநாகராட்சியுடன் இணைக்க கூடாது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வெட்டுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: