காவல்துறை சார்பில் போதை பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அந்தியூர், ஜூன் 27: அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் ஊராட்சி தலைவர் வழங்கி நூதன முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார். இந்த சமூக உணர்வு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் ஜமாபந்தியில் மனுக்களை பெற்றார். இதில் அத்தாணி, செம்புளிச்சாம் பாளையம், பெருமாபாளையம், குப்பாண்டம் பாளையம், கரட்டூர், கருவல்வாடிப்புதூர், நாடார் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை ஜமாபந்தி நிகழ்ச்சியில் சமர்ப்பித்தனர்.

நேற்று ஜமாபந்தி நடந்த நாளில் மனுக்களை வழங்க வந்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் ராம. கிருஷ்ணன் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் முன்னிலையில் வழங்கினார். இதையடுத்து ஜமாபந்தியில் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் ஊராட்சி தலைவர் வழங்கி நூதன முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார். இந்த சமூக உணர்வு பொதுமக்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.

இதேபோலகோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3-வது நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தீர்வாய நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், கோரிக்கைகள் குறித்து 232 மனுக்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மனுக்களின் மீது 3 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

The post காவல்துறை சார்பில் போதை பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: