செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தென் மாவட்டங்களுக்கான மணல் மூட்டைகள் தேக்கம்: உடனே அனுப்பி வைக்க கோரிக்கை

 

செங்கல்பட்டு, டிச. 25:செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தென் மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய மணல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மணல் மூட்டைகளை ரயில்கள் மூலம் தென் மாவட்டத்திற்க்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு அனுப்ப ரயில் நிலையம் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே எங்கு பார்த்தாலும் மணல் மூட்டைகளாகவே காணப்படுகின்றது. இந்த மணல் மூட்டைகளை வீணாக்காமல் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தென் மாவட்டங்களுக்கான மணல் மூட்டைகள் தேக்கம்: உடனே அனுப்பி வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: