சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் விழிப்புணர்வு, ஆலோசனை வழங்க சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: புதிதாக மறுசீரமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும்  வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவராக அரசு முதன்மைச் செயலாளரும்,  உறுப்பினர் செயலாளராக சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய ஓட்டல்கள், உணவகங்கள் சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சுற்றுப்பயணம் விருந்தோம்பல் சங்கம், இந்திய தொழில் வர்த்தக  சபைகளின் கூட்டமைப்பு, இந்திய தொழில்  கூட்டமைப்பு, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை, தென்னிந்திய கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள், கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம், எஸ்.கே.ஏ.எல் இண்டர்நேஷனல், தென் தமிழ்நாடு சுற்றுப் பயணம் சுற்றுலா சங்கம், சுற்றுலா பேருந்து சேவையாளர் சங்கம், அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம்,  இந்திய விமானப் பயணிகள் சங்கம், சென்னை ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் ‘தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சிக் குழு’வின் அலுவலர் அல்லாத உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2ஆண்டுகள் ஆகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: