சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

 

மேட்டுப்பாளையம், நவ.29: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆன்லைன் மூலமாக மேற்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் கடந்த 26ம் தேதியன்று தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக 1098 சைல்ட் ஹெல்ப்லைனுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து காரமடை ஊராட்சி ஒன்றிய ஊரக நல அலுவலர் அமராவதி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சித்ரா, எஸ்எஸ்ஐ மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் யாசர், ஊரக நல அலுவலர் அமராவதி, குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா உள்ளிட்டோர் தனியார் திருமண மண்டபத்தில் சிறுமியின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு 17 வயது என்பதும், கடந்த 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், 27ம் தேதியன்று திருமணம் நடக்க இருந்ததும் தெரிய வந்தது.

மேலும், தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், 18 வயது முடிந்த பிறகே திருமணம் செய்ய இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் இளைஞரின் பெற்றோரை கடுமையாக எச்சரித்து, 18 வயது நிரம்பிய பிறகே சிறுமிக்கு திருமணம் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

The post சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.