சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீஸர் நேற்று வெளியானது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா, விநய், சூரி உள்பட பலர் நடிக்கும் படம், எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த படம் மூலம் அவர் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார். பசங்க 2 படத்துக்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் பாண்டிராஜ். ஆக்‌ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக எதற்கும் துணிந்தவன் உருவாகியுள்ளது. இந்த படம் மார்ச் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகிறது.இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தில் இடம்பெறும் பல்வேறு சண்டை காட்சிகளை டீஸரில் காணலாம். டீஸரின் இறுதியில், ‘என் கூட இருக்கிறவங்க எப்பவும் பயப்படக்கூடாது. நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சூர்யா பேசும் வசனம் இடம்பெறுகிறது. இந்த டீஸர் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது. டிவிட்டரில் எதற்கும் துணிந்தவன் டீஸர் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. யுடியூப்பில் இந்த பட டீஸர் முதலிடம் பிடித்து வைரலானது….

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: