சத்தி,கோபி,நம்பியூரில் மழைக்கு 8 வீடுகள் இடிந்து சேதம்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுண்டம்மாள்(60) என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில்  சவுண்டம்மாள் மற்றும் அவரது மகன்கள் தர்மராஜ், பூபதி பிரசாந்த், மருமகள் ஞானசாந்தா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதே போல கோபி அருகே உள்ள நம்பியூர் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த வள்ளியம்மாள்(48) என்பவரது  வீடும், வேமாண்டாம்பாளையம் பழைய அரிசன காலனியை சேர்ந்த ரங்கன் மனைவி  ராக்கம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது.அதே போன்று  நம்பியூர் வேமாண்டாம்பாளையம் கிராமம் மின்னகாட்டு பாளையத்தை சேர்ந்த  திருமூர்த்தி மனைவி ஈஸ்வரி என்பவரது வீடும் மழைக்கு இடிந்து  விழுந்தது.அதே போன்று கோபி அருகே உள்ள வாணிபுத்தூர் உள்வட்டம்   கொண்டையம்பாளையம் பழையூரில் முனியன் மகன் ரங்கநாதன் என்பவரின் வீடு காரணமாக இடிந்து விழுந்தது. அதே போன்று அக்கரை கொடிவேரி பண்ணாடி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ரத்தினம்மாள் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நஞ்சைப்புளியம்பட்டி  பெருமாள் கோயில் வீதியில் கந்தசாமி மனைவி காளியம்மாள் என்பவரது வீடும், பெரியகொடிவேரி அருகே உள்ள டி.ஜி.புதூரில் அண்ணாமலை மனைவி சரோஜா என்பவரது  வீடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது.சஞ்சீவராயன் குளம் நிரம்பியதுகோபி அருகே உள்ள தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட வனப்பகுதி, மலைகிராமங்களில் பெய்யும் மழை பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள சஞ்சீவராயன் குளத்திற்கு வந்தடைகிறது. இக்குளத்தில் கடந்த 3 வருடங்களாக குறைந்த அளவே தண்ணீர் இருந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நேற்று குளம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் குளத்தின் மூலம் பாசனம் பெறும்கள்ளிப்பட்டி, கணக்கம் பாளையம், தண்ணீர் பந்தல் புதூர்,பெருமுகை,வரப்பள்ளம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோபி கோட்டாட்சியர் பழனிதேவி, வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று குளத்தையும், தண்ணீர் வெளியேறும் கரும்பாறை மதகு பகுதியையும் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து ஆய்வு செய்தனர்….

The post சத்தி,கோபி,நம்பியூரில் மழைக்கு 8 வீடுகள் இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: