க.காதலனுடன் வாழ்ந்த பெண் போதை பழக்கத்தால் தற்கொலை

திருப்பத்தூர்: கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். போதை மருந்து பழக்கத்தால் உயிரை மாய்த்துள்ளார். திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகு (36). இவரிடம் கூலி தொழிலாளியாக குடியாத்தம் வேலாயுதம், அவரது மனைவி புவனேஸ்வரி (35) ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.அப்போது தியாகுக்கும், புவனேஸ்வரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த வேலாயுதம், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலை புவனேஸ்வரி கைவிடவில்லையாம். இதனால் சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்த வேலாயுதம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இதையடுத்து கள்ளக்காதலர்கள் தம்பதி போல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் புவனேஸ்வரி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டராம். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், போதை ஊசி மருந்துக்கு அடிமையான புவனேஸ்வரி, அடிக்கடி போதை மாத்திரை மற்றும் போதை ஊசி மருந்தை பயன்படுத்துவாராம். இந்நிலையில் போதை ஊசி மருந்துகள் சரிவர கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்தது….

The post க.காதலனுடன் வாழ்ந்த பெண் போதை பழக்கத்தால் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: