கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை!

பக்வீட் பற்றி தெரிந்துகொள்வோம்* நார்ச்சத்து, புரதம், மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓர் உணவுதான் பக்வீட்(Buckwheat). மருத்துவ நிபுணர்கள் பக்வீட்டை மிகச் சிறந்த உணவாக கருதுவதால் இதற்கு சூப்பர் ஃபுட் என்றும் பெயர் உண்டு.* பக் வீட்டானது கோதுமை போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அது கோதுமையின் வகையெல்லாம் இல்லை. அப்படியென்றால் வெளிநாட்டு விவகாரமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? பக் வீட் நம்மூரிலும் பிரபலமாகிவரும் உணவுப்பொருள்தான். பப்பாரை என்பது இதன் தமிழ்பெயர். இதற்கு மரக்கோதுமை என்றொரு பெயரும் உண்டு. * பக் வீட் விதைகளை கஞ்சி செய்து சாப்பிடலாம். நூடுல்ஸ் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம்.* சமைக்கப்பட்ட ஒரு கப் பக்வீட் விதையில்,; கொழுப்புச் சத்து மிகக் குறைவாக ஒரு சதவிகித அளவிலும், நார்ச்சத்து 5 கிராம் அளவிலும், கார்போஹைட்ரேட் 33 சதவிகித அளவிலும், புரதம் 6 கிராம் அளவிலும் இருக்கும். கலோரி 155 கிராம் இருக்கும். இது தவிர மக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங், நியாசின், மாங்கனீசு, போலேட் மற்றும் விட்டமின் B6 போன்ற சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளன. * பக்வீட் விதை எல்டிஎல் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதயக் குழாய்கள் தடிமன் ஆவதை தடுக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த விதையில் உள்ள சில சத்துக்களால் ரத்த அழுத்தமும் சீராகிறது.* மற்ற முழு தானியங்களோடு ஒப்பிடுகையில் பக்வீட்டிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸை (சென்ஸ்டிவிட்டி) அதிகரிக்கிறது. * நார்ச்சத்து 6 சதவிகிதம் மட்டும் இருப்பதால், இதனை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பசியெடுக்காது. அதனால் எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். * எளிதில் ஜீரணமாகக்கூடிய தாவர புரதம் இது. ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் சமைத்து சாப்பிடலாம். வெந்தவுடன் பார்த்தால் பார்லி போல இருக்கும். இதனை மாவாக அரைத்தும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தலாம்.* பக் வீட் ஆர்கானிக் கடைகளிலும், ஆன் லைன் கடைகளிலும் கிடைக்கிறது.

The post கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை! appeared first on Dinakaran.

Related Stories: