எடையும் குடைமிளகாயும்!

நன்றி குங்குமம் தோழி

குடத்தை போல் உருவமுள்ளதால் குட மிளகாய் என்று அழைக்கப்பட்டு பின் மருவி குடை மிளகாய் என்றானது. ஆங்கிலத்தில் இதனை பெல்பெப்பர் மற்றும் கேப்சிகன் என்று அழைக்கிறார்கள். இதை தஞ்சாவூர் மிளகாய் என்றும் கூறுவர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் இவை பச்சை, சிவப்பு, மஞ்சள் என பலவகை நிறங்களில் கிடைக்கிறது. குறைந்த காரச்சுவையும், ஒருவகை மணமும் கொண்ட குடைமிளகாயை கறி, புலாவ், சாலட், தயிர் பச்சடி என பலவித உணவுகளில் பயன்படுத்தலாம். சிறு குடைமிளகாய்களை புளித்தத் தயிரில், உப்பு சேர்த்து ஊறவைத்து மோர்மிளகாய் போன்றும் சாப்பிடலாம்.

* குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளது.

* இதில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கிய தேகத்தைக் கொடுக்க உதவுகிறது.

* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்.

* ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரையின் அளவினை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

* காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கி, உப்பு, மிளகுதூள், எலுமிச்சை சேர்த்தால் அருமையான சாலட் தயார்.

* குடைமிளகாயில் நிறைந்துள்ள ‘வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

* வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.

* சாதாரண மிளகாயைவிட இதில் சதைப்பற்று அதிகம். அளவாக பயன்படுத்தினால் அஜீரணத்தை போக்க உதவும்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post எடையும் குடைமிளகாயும்! appeared first on Dinakaran.

Related Stories: