கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

நன்றி குங்குமம் தோழி

அவரைக்காய் சாதாரணமாக கிடைக்கும் காய் வகையாகும். இதில் பல வகைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் பலன்கள் ஒன்று போலவே இருக்கும். இருப்பினும் மருத்துவ முறைக்கும், பத்திய உணவுக்கும் பச்சை நிற அவரைப் பிஞ்சுகளே சிறந்ததாக கருதப்படுகிறது.

*கண் வலி, கண் பார்வை மங்கல், கண்ணில் குத்துதல் போன்ற உணர்வு, கண்கள் சிவப்பு நிறமுண்டாவது, கண்ணீல் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதில் முதலிடம் பெற்றது அவரைக்காய்.

*வாத சம்பந்தமான வியாதிகள் உள்ளவர்கள் தொடர்ந்து அவரைப் பிஞ்சை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வியாதி குணமாகிவிடும்.

*உடம்பில் ரணம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு மருந்து தடவி விடும் சமயம் பிஞ்சு அவரைக்காயை சுத்தம் செய்து, அத்துடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடலாம். எந்த வகையிலாவது அவரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரணம் ஆறிவிடும்.

*விதை பிடிக்காத பிஞ்சு அவரைக்காயைத்தான் மருத்துவ பயனுக்கு பயன்படுத்த வேண்டும். பூப்பிஞ்சைத்தான் பத்திய உணவிலும் சேர்க்க வேண்டும். விதை பிடித்த காய் மருந்தின் குணத்தை கெடுத்து விடும். உடல் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்றுப் போக்கையும் கொடுத்து விடும். ஆகவே விதை பிடிக்காத அவரைப் பிஞ்சை சாப்பிட்டு வந்தால் மருத்துவ பயனை முழுமையாக பெறலாம்.

– எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

The post கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்! appeared first on Dinakaran.

Related Stories: