கோடை வெப்பத்தின் அதிகரிப்பால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்

நாகை: கோடை வெயில் அதிகரிப்பதால் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் துவங்கியுள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு பகுதிகளில் சுமார் 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.நடப்பு ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பாத்திகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றி உப்பு சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் 7 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் இரண்டு மாதம் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் அதே இலக்கை எட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்….

The post கோடை வெப்பத்தின் அதிகரிப்பால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: