கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 5ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழையாறு துறைமுக முகத்துவாரம் வழியே சென்று தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் விசை படகுகள் மற்றும் பைபர் படகுகள் முகத்துவாரம் வழியே செல்வதில் சிரமம் ஏற்படுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் 5வது நாளான நேற்று 5ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் விசைப்படகுகள் பழையாறு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழையாறு துறைமுகத்தில் மீன்விற்பனை செய்தல், மீன்களை தரம்பிரித்தல், கருவாடு உலர வைத்தல், கருவாடுகளை விற்பனை செய்தல், ஐஸ்கட்டி தயாரித்தல், மீன்வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 2 ஆயிரம் தொழிலாளர்களும் பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு வேலைக்கு செல்ல முடிய வில்லை. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவ தொழிலாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என மீனவர்கள், மீனவ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைப்புமயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, மேலவாடி ஆகிய திட்டு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து நீர் வடியாமல் உள்ளது. கிராம சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 4 ஆயிரம் பேர் வீடு திரும்ப முடியாமல் தொடர்ந்து முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 நேரமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் முகாம்களில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். சுகாதாரத்துறை மருத்துவர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இடி, மழைக்கு இளம் பெண் பலிபுதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சியில் மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயி. இவரது மனைவி கோகிலா (35). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களுக்கு சொந்தமான பசு மாட்டினை கோகிலா வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயம் மழையுடன் பலத்த இடி இடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் ஓட்டி சென்ற பசு மாடும் அங்கேயே பரிதாபமாக இறந்தது. கந்தர்வகோட்டை போலீசார் கோகிலா உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

The post கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: