கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது: புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு மக்கள் நல்வாழ்வு துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. 
ஆக்சிஜன் அளவு 90 – 94க்குள் உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம் என தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்மே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்தவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

The post கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது: புதிய நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: