குளங்களில் பிளாஸ்டிக், இறைச்சி கழிவு அதிகரிப்பு

 

கோவை, ஜூன் 12: கோவை நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. நகரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசாம்பதி, செல்வாம்பதி உட்பட 9 குளங்கள் பராமரிப்பிற்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணகுளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை பராமரித்து வருகிறது. இந்த குளங்களில் பல முறை ஆகாய தாமரை அகற்றப்பட்டது.

முத்தண்ண குளம், குறிச்சி குளம், நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆகாய தாமரை அகற்ற பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது செல்வசிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் ஆகாய தாமரைகள் அதிகமாகிவிட்டது. ஆகாய தாமரைகளை அகற்றாமல் விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் நீர் கெட்டு போய் நிறம் மாறி விட்டது. சில இடங்களில் கருப்பு நிறமாக நீர் காட்சியளிக்கிறது. பெரியகுளம், வாலாங்குளத்தில் மழை நீர் தடுக்கப்பட்டு சாக்கடை நீர் மட்டுமே விடப்பட்டதால், கருப்பு நிறத்தில் நீர் தேக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

வறட்சி அதிகரித்த நிலையில் செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளத்தில் முழு அளவில் சாக்கடை நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கழிவு நீர் பண்ணைக்கு செல்ல வேண்டிய கழிவு நீர் குளங்களுக்கு செல்லும் நிலைமை இருக்கிறது. பெரிய குளம், வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி குவியலாக கொட்டப்படுகிறது. வாய்க்காலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அடைபட்டு இருப்பதால் அசுத்த நிலை காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

The post குளங்களில் பிளாஸ்டிக், இறைச்சி கழிவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.