குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம்

சென்னை:  சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளி குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிகிழமைகளில் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்துக்கான திறந்தவெளி குறைதீர் கூட்டம், இன்று  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில், ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும்.எனவே, இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம்….

The post குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: