காவல் துறை சார்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

கோவை, ஜன. 7-கோவை நகரில் இளம் குற்றவாளிகளை தடுக்கும் விதமாக பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க போலீசாரால் ‘ஆபரேஷன் ரீபூட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை மூலமாக இடை நின்ற மாணவர்களை போலீசார் கண்டறிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து பேசி மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களிடம் பள்ளி செல்லாதது குறித்து காரணம் கேட்டறிந்து, படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும் போலீசார் மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கின்றனர்.இதன் பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன் 173 இடைநின்ற பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும், 48 இடைநின்ற பள்ளி மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது வரை மொத்தம் 221 பேர் சேர்க்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இடைநின்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் சமூதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு எடுத்து கூறினர்.

The post காவல் துறை சார்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: