காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 360 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் : பன்னாட்டு அரசுகளின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

மும்பை : காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 360 கோடி பேர் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு அரசுகளின் ஆய்வறிக்கை கூறுகிறது. புவி வெப்பமாதல் தொடர்ந்தால் மனிதர்கள், பேரிடர்களை தவிர்க்க இயலாததாக ஆகிவிடும் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் சமூக பொருளாதாரம் மற்றும் இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தகவமைப்பதற்கான வழிகள் குறித்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையானது உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்வதாக எச்சரித்துள்ளது. புதிய வெப்பநிலை உயர்வால் மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டு, இயற்கை மற்றும் மனிதர்கள் இனிமேல் தகவமைத்து கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரும் பட்சத்தில் தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்கள் உருவாகும் என்று ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் பலன் தரவில்லை என்பதும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டும் செய்தியாகும்….

The post காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 360 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் : பன்னாட்டு அரசுகளின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: