இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான்(72) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்ஒரு பகுதியாக அல்-காதர் பல்கலைக் கழகம் தொடங்க அறக்கட்டளை அமைத்து நிலம் வாங்கிய முறைகேட்டில் அரசுக்கு ரூ.5,500 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்-காதர் பல்கலைக் கழக ஊழல் வழக்கில் புஷ்ரா பீபிக்கு முன் ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: