பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

லண்டன்: பார்பி பொம்மையின் 65 ஆண்டுகால மாற்றங்கள் குறித்த கண்காட்சி லண்டனில் நாளை தொடங்குகிறது. அமெரிக்க வர்த்தகரான ருத் ஹேண்ட்லர் தனது மகள் பார்ஃபராவை மனதில் நிறுத்தி 1959ம் ஆண்டு பார்பி பொம்மையை உருவாகினார். வெள்ளி நிற நீச்சல் உடையில் உருவாக்கப்பட்ட முதலாவது பார்பி பொம்மையின் 65ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இப்போது பல்வேறு வண்ணங்களில் பலவிதமான தலைமுடி அமைப்பு, உடல்வாகு கொண்ட பொம்மைகளாக உலக அரங்கில் வலம் வருகின்றன.

அந்த பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து பொதுமக்கள் காணும் வகையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாளை முதல் 25ம் தேதி வரை பார்பி பொம்மை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த காண்காட்சியில் மாற்றம் பெற்ற 250 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பொம்மைகளின் சந்தையில் பார்பி ஆதிக்கம் செலுத்தி வருவதை பலரும் பார்க்கும் வகையில் இருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

The post பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் appeared first on Dinakaran.

Related Stories: