அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுகிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி கடந்த 2020ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் மீண்டும் அதிபர் தேர்தல் நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும்தான் செல்வாக்கு அதிகம். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அவர்கள் தீவிர பிரசாரத்திலும் இறங்கி விட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் பைடன், டிரம்ப் இடையே விவாதம் நடந்தது. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சியான சிஎன்என் சார்பில் இந்த விவாதம் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் டிரம்ப் கைதான் ஓங்கியது. பைடன் பல இடங்களில் திணறினார்.

இது ஆளும் ஜனநாயக கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அட்லாண்டா விவாதத்துக்கு பின், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்ற வாதம் ஜனநாயக கட்சிக்குள் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பின்படி, டிரம்புக்கு 47 சதவீத மக்களும், கமலா ஹாரிசுக்கு 45 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா போட்டியிட்டால், அவருக்கு 50 சதவீத மக்களின் ஆதரவும், டிரம்புக்கு 39 சதவீத மக்களின் ஆதரவும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

 

The post அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: