ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

லண்டன்: பரபரப்பான அரசியல் சூழலில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இந்திய நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 107 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மொத்தம் 650 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கை பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஸ்டார்மெர் தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றுவார் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி இந்தமுறை வெறும் 64 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை இழக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேநேரம் தொழிலாளர் கட்சிக்கு 484 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 1997ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் டோனி பிளேர் பெற்ற 418 தொகுதிகளில் வெற்றி என்ற பெரிய வெற்றியை விட அதிகமாகும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியில் 15பேர் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 30 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் 23 பேர் புதுமுகங்கள் ஆவர். தொழிலாளர் கட்சியில் போட்டியிட 33 இந்திய வம்சாவளியினரில் 26 பேர் புதுமுகங்கள் ஆவர். சிறு கட்சிகளான கிரீன் கட்சியில் 13 பேரும், சீர்திருத்தக் கட்சியில் 13 பேரும், தாராளவாத ஜனநாயகக் கட்சியில் 11 பேரும் மொத்தம் 107 இந்திய வம்சாவளியினர் களத்தில் இருக்கிறார்கள். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

The post ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: