ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!

ஜமைக்கா : கரீபியன் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டில் வீசிய சூறாவளி புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பெரில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல், ஜமைக்காவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய 4வது நிலையாக இந்த பெரில் புயல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மணிக்கு 225 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன. பெரில் புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த புயல் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஜமைக்கா மட்டுமல்லாது, கிராண்ட் கேமன், லிட்டில் கேமன் மற்றும் கேமன் ப்ராக் மற்றும் மெக்சிகோவில் உள்ள யுகடன் தீபகற்பத்தையும் இந்த புயல் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கடந்து செல்லும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜமைக்கா பிரதமர் ண்ட்ரூ ஹோல்னஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!! appeared first on Dinakaran.

Related Stories: