நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் கமல் தஹல் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு கடந்த 4 மாதமாக வழங்கி வந்த ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றுக் கொண்டது. அதே சமயம், இரு பெரும் கட்சிகளான நேபாளி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்க நேற்று முன்தினம் இரவு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும் பிரசந்தா கூறி உள்ளார்.

அந்நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 30 நாட்கள் அவகாசம் கேட்கலாம். இதுவரை ஒன்றரை ஆண்டு ஆட்சியில் 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றுள்ளார். நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது புதியது அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு புதிய அரசு அமைந்து உள்ளது. மொத்தம் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாளம் நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு 89 உறுப்பினர்கள் உள்ளனர். நேபாளம் கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாளம் காங்கிரஸ்- மாவோயிஸ்ட் கட்சிக்கு 32 உறுப்பினர்களும் உள்ளனர்.

The post நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: