நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

ஐநா: உக்ரைன் – நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் சூளுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தன் பிரசாரத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமனர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதிபர் தேர்தல் தொடர்பான பைடன், டிரம்ப் விவாதத்தில் டிரம்ப்பின் கையே ஓங்கி உள்ளது. கடந்த வாரம் பைடனுடன் நடந்த விவாதத்தில், “ரஷ்ய அதிபர் புடினால் மதிக்கப்படும் சிறந்த நபர் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனை புடின் ஆக்கிரமித்திருக்க மாட்டார்” என தெரிவித்திருந்தார்.

இதேபோல் தன் பிரசாரங்களிலும், “நான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் முடிவுக்கு கொண்டு வருவேன்” என டிரம்ப் பேசி வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கான ஐநா தூதர் வாசிலி நெபன்சியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கடந்த 2022 ஏப்ரலில் உக்ரைனும், ரஷ்யாவும் ஒரு ஒப்பந்தத்தை நெருங்க முயன்றபோது, உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள் ஒப்பந்தத்தை தடுத்தன. ரஷ்யாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனுக்கு அறிவுறுத்தின. இப்போது உக்ரைன் அதிபர் அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் நகைச்சுவை திட்டம் ஒன்றை தூக்கி கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

The post நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: