காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு கூட்ஸ் ரயில் அருகே தண்டவாளத்தில் விழுந்த முதியவரை மீட்ட ரயில்வே போலீசார்: வைரலாகும் வீடியோ

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கூட்ஸ் ரயில் அருகே விழுந்த முதியவரை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று காலை 11.40 மணியளவில் வடமாநில முதியவர் ஒருவர் பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி  முதல் தண்டவாளத்தை கடந்து சென்றார். எதிரே 2வது தண்டவாளத்தில் கூட்ஸ் வண்டி நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கூட்ஸ் வண்டிக்கு கீழே நுழைந்து சென்று விடலாம் என்று அந்த முதியவர் முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய முதியவர் தண்டவாளத்திற்கு கீழே உள்ள பள்ளத்தில் விழுந்தார். அந்த நேரத்தில் கூட்ஸ் ரயில் புறப்பட்டு விட்டது. முதியவர் தவறி விழாமல் கூட்ஸ் ரயிலை கடக்க முயன்றிருந்தால் கூட்ஸ் ரயிலில் சிக்கியிருப்பார். முதியவர் கீழே விழுந்ததை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த காட்பாடி ரயில்வே காவலர் வினோத் மற்றும் தலைமை காவலர் சண்முகம் ஆகியோர் ஓடிச்சென்று முதியவரை மீட்டனர். இந்த சம்பவம் காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.முதியவரை ஓடிச்சென்று மீட்ட ரயில்வே போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவம்  ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது….

The post காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு கூட்ஸ் ரயில் அருகே தண்டவாளத்தில் விழுந்த முதியவரை மீட்ட ரயில்வே போலீசார்: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: